"அடுத்த சில ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடியில் புதிய ரயில்கள்" - மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் தகவல்
ரயில்களில் காத்திருப்போர் பட்டியலை பூஜ்யம் நிலைக்குக் கொண்டு செல்ல, அடுத்த சில ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில்கள் வாங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்திய ரயில்வே தற்போது தினசரி 10 ஆயிரத்து 754 ரயில் பயணங்களை இயக்கி வருவதாகக் குறிப்பிட்டார். காத்திருப்போர் பட்டியலை முற்றிலும் குறைக்க மேலும் 3 ஆயிரம் ரயில்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது ஒவ்வொரு ஆண்டும் 700 கோடி பயணிகள் சென்று வரும் நிலையில் இந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டு ஆயிரம் கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Comments